Header Ads

ரொறன்ரோவில் மூன்று வாகனங்கள் மோதிக் கோர விபத்து! 6 பேர் படுகாயம்…

 


ரொறன்ரோவில், Downsview பிரதேசத்தில் நேற்றுக்காலை 11.30 மணியளவில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய ஆறு பேர் காயமடைந்துள்ளனர், ஒருவரின் நிலை ஆபத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.

அதிவேகத்தில் சென்ற பென்ஸ் சொகுசு வாகனம் ஒன்றை பொலிஸ் அதிகாரி ஒருவர் விரட்டிச் சென்று நிறுத்த முற்பட்ட போது, அந்த வாகனம், வேறு இரண்டு வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பென்ஸ் வாகனத்தில் இருந்த 23 வயது இளைஞன் ஒருவரும், பெண் ஒருவரும் படுங்காயம் அடைந்துள்ளனர்.

இன்னொரு வாகனத்தில் பயணம் செய்த நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுவருகின்றனர்.

No comments

Powered by Blogger.