Header Ads

காட்டுப்பகுதியில் 5 மனித தலைகளை வெட்டி வீசிய மர்ம நபர்

 


அமெரிக்காவில் மருத்துவ மாணவர்களுக்கான ஆய்வுகளுக்கு என சடலங்களை வழங்கும் தொழில் செய்து வரும் 59 வயது Walter Mitchell என்பவர் செய்துவந்துள்ளார்.

இந்நிலையில் அரிசோனா மாகாணத்தில் வெட்டப்பட்ட நிலையில் 5 மனித தலைகளும் 24 உடல் பாகங்களும் மீட்கப்பட்ட விவகாரத்தில் Walter Mitchell கைதாகியுள்ளார்.

அரிசோனா மாகாணத்தில் காட்டுப்பகுதியில் 4 நாட்களுக்கு முன்னர் இருவேறு பகுதியில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணையை முன்னெடுத்த பொலிசார் Walter Mitchell ஐ தற்போது கைது செய்துள்ளனர்.

சியாட்டில் பகுதியில் அமைந்துள்ள இவரது நிறுவனத்திற்கு சொந்தமான உடல் பாகங்களே அவை என பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

அரிசோனாவின் பிரெஸ்காட் நகருக்கு வெளியே இரண்டு மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து யவபாய் கவுண்டி ஷெரிப்பின் அலுவலகத்திற்கு பொதுமக்கள் முதலில் அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து விசாரணை அதிகாரிகள் முன்னெடுத்த தீவிர சோதனையில் வெட்டப்பட்ட நிலையில் கை கால்கள் உள்ளிட்ட 19 உடல் பாகங்கள் கண்டெடுத்தனர்

இரண்டாவது நாள், இன்னொரு பகுதியில் 5 வெட்டப்பட்ட மனித தலையுடன் மேலும் சில உடல் பாகங்களை அதிகாரிகள் மீட்டனர்.

கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணையில் அந்த உடல் பாகங்கள் வால்டர் மிட்செல் நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது.

இதனையடுத்தே வால்டர் மிட்செல் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.