3 வயது சிறுவனை கல்லறை தோட்டத்தில் கைவிட்ட தாய்
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் 3 வயது சிறுவனை கல்லறைத் தோட்டத்தில் கைவிட்டு தாயார் மாயமாகியுள்ளார்.
தந்தை தாயார் மீது வழக்குப்பதிய செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த புதன்கிழமை மதியம் 12.16 மணியளவில் ஓஹியோவில் உள்ள ஹோப் மெமோரியல் கார்டன்ஸ் கல்லறையிலிருந்து ஒரு நீல நிற கார் வேகமாக அங்கிருந்து மாயமாவதைக் கண்டதாக சாட்சிகள் சிலர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் தற்போது அவனது தந்தையின் பாதுகாப்பில் இருக்கின்றார்.
சிறுவனை கல்லறையில் விட்டுச்சென்ற தாயார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் கண்டிப்பாக வழக்குப் பதிந்து விசாரணை முன்னெடுக்கப்படும் என உறுதி செய்துள்ளனர்.
பொலிசார், சிறுவனின் தாயார் உள்ளூர் சுகாதார மையம் ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.
சிறுவன் டோனியும் அவனது நாயும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லறையில் கைவிடப்பட்டுள்ளனர்.
சிறுவனின் நிலை தொடர்பில் அறியவந்த பொதுமக்கள் பலர் சிறுவனுக்கு ஏராளமான கிறிஸ்துமஸ் பரிசுகளை அனுப்பி வைத்துள்ளனர்.
No comments