அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு! 5 பேர் பலி
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரில் உள்ள ஒரு மருந்துக் கடையில் நேற்று மாலை மக்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை வாங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது கடைக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கிருந்த நபர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
கடைக்குள் இருந்தவர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்குமிங்குமாக ஓட்டம் பிடித்தனர்.
இதில் பலரது உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து இரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில் தகவலறிந்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்பு அந்த மர்ம நபர் மருந்துக் கடையின் பின்புறமாக வெளியேறி ஓடும் போது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே ஓடினார்.
இதில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பலர் சுருண்டு விழுந்தனர்.
ஈவன்ஸ்டோன் என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்குள் சென்ற மர்ம நபர் அங்கிருந்த ஒரு பெண்ணை பிணைக் கைதியாக பிடித்து வைத்து பொலிஸாரை மிரட்டினார்.
பொலிஸார் சரணடைந்து விடும்படி அவரை எச்சரித்ததால் அந்தப் பெண்ணை துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றார்.
ஆனால் பொலிஸார் அந்த மர்ம நபரை சுட்டு வீழ்த்தியதில அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அந்த மர்ம நபர் நடத்திய இந்த தொடர் துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகினர்.
பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்த பெண் உள்பட பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
No comments