அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக பதவியேற்கும் ஜோ பைடன்
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி சார்பில் பைடன் போட்டியிட்டார்.
அந்தத் தேர்தலில் 306 மக்கள் பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, வாஷிங்டனிலுள்ள நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை காலை 11.30 மணிக்குநடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் அவர் அதிபராகப் பொறுப்பேற்கிறார்.
அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக ஜோ பைடன் பதவியேற்கிறார்.
அவருடன் துணை அதிபராக கமலா ஹாரிசும் பதவியேற்கவுள்ளார்.
இந்த விழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா காலம் என்பதால் குறைந்த அளவிலான பங்கேற்பாளர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை முன்னாள் அதிபரான டிரம்ப் புறக்கணிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.




No comments