🔴 விசேட செய்தி : கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐவர் சாவு!!
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐந்து பேர் சாவடைந்துள்ளதாக சற்று முன்னர் செய்தி வெளியாகியுள்ளன.
Pfizer மற்றும் BioNTech ஆகிய இரு தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட ஐவரே இவ்வாறு சாவடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஐந்து இலட்சம் பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 139 பேரின் உடல்நலத்தில் எதிர்பாராத உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஐவர் சாவடைந்தும் உள்ளனர்.
சாவடைந்த ஐந்து பேரில் மூவர் Nancy நகரிலும், ஒருவர் Tours நகரிலும், ஐந்தாமவர் Montpellier நகரிலும் சாவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை ministère de la Santé சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.
No comments