ஜனாதிபதி மக்ரோனின் செல்வாக்கு??!! - 40% வீத புள்ளிகள் - புதிய கருத்துக்கணிப்பு!!
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு தொடர்பாக புதிய கருத்துக்கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
இதன்படி, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தற்போது 40% வீத புள்ளிகள் நன்மதிப்புடன் உள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 38% வீத புள்ளிகளுடன் இருந்த நிலையில், தற்போது 2 புள்ளிகளால் செல்வாக்கு அதிகம் பெற்றுள்ளார்.
அதேவேளை, பிரதமர் Jean Castex, கடந்த மாதம் பெற்ற அதே செல்வாக்குடன் தற்போதும் உள்ளார். பிரதமர் 37% வீத செல்வாக்குடன் உள்ளார்.
*இந்த கருத்துக்கணிப்பு கடந்த 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட 1,913 பேரிடம் எடுக்கப்பட்டிருந்தது.
No comments