🔴 கொரோனா வைரஸ் : பரிஸ் நகர நிலவரம்..!!
கொரோனா வைரஸ் காரணமாக பரிசில் தற்போது பதிவாகியுள்ள தொற்று மற்றும் சாவு விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த 3 நாட்களில் பரிசில் 20 பேர் கொரோனா வைரஸ் காரணமாக சாவடைந்துள்ளனர். 2,846 பேர் இதுவரையில் பரிசில் சாவடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் 750 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் 155 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பரிஸ் மருத்துவமனையில் 39.7 % வீத அவசரப்பிரிவு கட்டில்கள் நிரம்பியுள்ளன.
பரிசில் தற்போது ஒவ்வொரு 100.000 பேருக்கும் 200 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.
No comments