கொரோனா - 24 மணி நேரம் - உச்சத்தைத் தொட்டுள்ள சாவுகளும் தீவிர சிசிச்சை நோயாளிகளும்
பிரான்சின் கொரோனாச் சாவகள் கடந்த 24 மணி நேரத்தில் உச்சத்தைத் தொட்டுள்ளன. பல்வேறு உருமாறிய கொரோனா வைரஸ் பரவு ஆரம்பித்துள்ளமை பிரான்சை பேராபத்தான நிலைக்குள் தள்ளி உள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் ஆய்வுகூடங்களில் இருந்து முழுமையான தொற்றுத் தரவுகளும் கிடைக்காத நிலையிலல் கடந்த 24 மணி நேரத்திற்குள் 4.240 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பிரான்சில் கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டி 3.057.857 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் வைத்தியசாலைகளில் 445 பேர் சாடைந்துள்ளனர். இதனால் மொத்தச் சாவுகள் 73.494 ஆக உயர்ந்துள்ளது. மருத்தவமனைகளில் மட்டும் 51.518 பேர் சாவடைந்துள்ளனர்.
26.924 கொரோனத் தொற்று நோயாளிகள் தற்சமயம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடையாமல் அதிகரித்த வண்ணமே உள்ளன.
3000 என்ற எல்லையைத் தாண்டி 3041 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். நாளிற்கு நாள் இது அதிகரித்தே செல்கின்றது.
No comments