பிரான்சில் கொரோனாத் தடுப்பு ஊசிகள் இன்று இரவு வரை 1.349.517 பேரிற்கு
பிரான்சில் பெருமளவான கொரோனாத் தடுப்பு ஊசி விநியோகத் தட்டுப்பாடு நிலவுவதால், நாடு முழுவதும் முதற்கட்டத் தடுப்பு ஊசிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பிரான்சில் கொரோனாத் தடுப்பு ஊசிகள் போடப்பட ஆரம்பித்ததில் இருந்து, இன்று இரவு வரை 1.349.517 பேரிற்குக் கொரோனாத் தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ளன.
ஒழுங்கான விநியோகம் இருந்திருந்தால், இன்று இரவு 1.400.000 பேரிற்கு அதிகமாகக் கொரோனா தடுப்பு ஊசிகள் போட்பட்டிருக்கும் எனவும், பெப்ரவரி மாத இறுதிக்குள் 2.5 மில்லியன் பேரிற்குத் தடுப்பு ஊசிகள் போடப்பட்டு விடும் எனவும், பிரான்ஸ் அரசாங்கத்தின் பேசவல்லவரான கப்ரியல் அத்தால் தெரிவித்துள்ளார்.
அதாவது 1 மில்லியன் பேரிற்கு முதற்கட்ட அலகு தடுப்பு ஊசியும், 1.5 மில்லியன் பேரிற்கு இரண்டாவது அலகு ஊசியும் பெப்ரவரி இறுதிக்குள் போடப்பட்டு விடும் என்பதே இலக்காக உள்ளது.
ஆனால் தற்போது, மார்ச் மாத ஆரம்பம் வரை, யாரிற்கும் முதற்கட்டத் தடுப்பு ஊசிகள் போடப்படமாட்டாது என பிராந்திய சுகாதார நிறுவனங்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments