🔴 கொரோனா தடுப்பூசி! - இன்றைய நிலவரம்..!!
கொரோனா வைரசுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை துரிதமாக இடம்பெற்று வருகின்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வரை 422.127 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 57,746 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
இதனால் மொத்தமாக இதுவரை 479,873 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இன்று திங்கட்கிழமை புதிதாக பல கொரோனா சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டு, 75 வயதுக்கு மேற்பட்ட பலர் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர். இதில் எதிர்பார்ர்ததை விட மிக அதிகமானோர் தங்கள் பெயரை முன் பதிவு செய்து, தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.
பெப்ரவரி மாத இறுதிக்குள் 2.4 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்படுவதை இலக்காக கொண்டு அரசு இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments