Header Ads

பெல்ஜியத்தில் கலவரமாக மாறிய ஆர்ப்பாட்டம்! 116பேர் கைது!

 


பெல்ஜியத்தில் கொரோனா விதிகளை மீறியதாக கூறி கைதான கருப்பின இளைஞர் பொலிஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தலைநகர் Brussels-ல் கலவரம் வெடித்துள்ளது.

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞருக்கு நீதிக் கேட்டு முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு பின் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் நிலையத்தையும் பொது சொத்துக்களையும் தீயிட்டு கொழுத்தியது உள்ளிட்டது தொடர்பாக 30 சிறுவர்கள் உட்பட மொத்தம் 116பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 500 எதிர்ப்பாளர்கள் கலந்துக்கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு பெரும்பாலான வன்முறைகள் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

23 வயதான இப்ராஹிமா பாரி என்ற கருப்பின இளைஞர், நகரின் தெருக்களில் நான்குக்கும் மேற்பட்டோர் கூடுவதற்கான வரம்பை மீறியதற்காக கடந்த சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

பொலிஸ் காவலில் இளைஞர் பாரி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான பின் பொதுமக்கள் ஊரடங்கு விதிகளை மீறி வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாரி இறந்ததற்கான உண்மையான காரணத்தை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வைத்துள்ளனர்.

இதனிடையே, பெல்ஜியம் மன்னரின் வாகனம் கலவரக்காரர்களிடையே தாக்குதலுக்கு உள்ளானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.