Header Ads

உலக அளவில் மிகவும் பிரபலமான WWE மல்யுத்த வீரர் மரணம்

 


உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் WWE மல்யுத்தமும் ஒன்று.

இந்த விளையாட்டில் உள்ள பிரபலமான வீரரான லூக் ஹார்ப்பர் “வயட் பெம்லி’ என்ற பெயருடைய குழுவுடன் இணைந்து மல்யுத்தத்தில் பங்கேற்றுவந்தார்.

பின்னர் அந்த குழுவில் இணையாமல் தனியாகவே போட்டிகளில் பங்கேற்று வந்தார்.

லூக் ஹார்ப்பரின் உண்மையான பெயர் ஜானத்தன் ஹுபர். 41 வயதான லூக் ஹார்ப்பர் மல்யுத்த விளையாட்டில் பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளார்.

இவர் 2019 ஆம் ஆண்டு WWE மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், நுரையீரல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த லூக் ஹார்ப்பர் நேற்று உயிரிழந்ததை அவரது மனைவி அமேண்டா உறுதிபடுத்தியுள்ளார்.

லூக் ஹார்ப்பரின் மறைவு அவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைய செய்துள்ளது மேலும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.