Header Ads

பிரித்தானியாவில் கர்ப்ப சோதனைக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த ஆச்சரியம்!

 


பிரித்தானியாவின் Lincolnshire-ன் Horncastle-க் இருக்கும் மருத்துவமனையில் கடந்த 9-ஆம் திகதி 33 வயது மதிக்கத்தக்க Holly Giles என்ற கர்ப்பிணி பெண், தன்னுடைய 20 வார கர்ப்ப பரிசோதனைக்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்த போது அவர் பார்த்த காட்சி நம்ப முடியாத அளவில் இருந்துள்ளது.

அதில் கருப்பையினுள் இருக்கும் குழந்தை, கட்டை விரலை உயர்த்தி காட்டுவது போன்று இருந்தது.

தன்னுடைய நணபர் இதை புகைப்படம் எடுக்க அனுமதித்ததாக கூறும் அவர், தனது வாழ்க்கையில் இது போன்று பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் தான் இந்த பரிசோதனைக்காக நண்பர் ஒருவரை தன்னுடன் அழைத்து வந்ததாகவும், அப்போது சோதனை செய்த மருத்துவர் OH MY GOD என்று சொல்லியுள்ளார்.

உடனே நாங்கள் திரையைப் பார்த்த போது, அது மிகவும் அரிதானதாக இருந்தது.

நான் 16 வயதில் இருந்தபோது என் அம்மாவை இழந்தேன், எனவே இது எப்போதும் ஒரு கடினமான அனுபவமாக இருக்கும்.

ஆனால் அந்த சிறிய சைகை மிகவும் அழகாக இருந்தது.

நான் அவரை அல்லது அவளைப் பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன் என உருக்கமாக கூறியுள்ளார்



No comments

Powered by Blogger.