அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து ! 4 பேர் படுங்காயம்
சிரியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெறும் நிலையில் லட்சக்கணக்கானோர் சிரியாவை விட்டு வெளியேறி லெபனான், துருக்கி உள்ளிட்ட அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
இதற்கிடையில், லெபனானின் மினியஹ் மாகாணம் பக்னைன் நகரில் அகதிகள் முகாம் ஒன்றை அமைந்துள்ளது.
அந்த முகாமில் சிரியாவை சேர்ந்த 370-க்கும் அதிகமான அகதிகள் வசித்து வந்தனர்.
இந்நிலையில், அந்த முகாமில் வசித்துவந்த சிரியாவை சேர்ந்த சில அகதிகளுக்கும், உள்நாடான லெபனானை சேர்ந்ந்த சிலருக்கும் இடையே நேற்று திடீரென மோதல் ஏற்பட்டது.
மோதல் முற்றிய நிலையில், ஒரு நபர் தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை கொண்டு திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் அகதிகள் முகாமில் தீப்பற்றியது.
தீ மளமளவென பரவியதால் அகதிகள் அனைவரும் முகாமை விட்டு தப்பியோடினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் முகாமில் பற்றியை தீயை அணைக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால், தீ வேகமாக பரவியதால் அகதிகள் முகாம் முழுவதும் தீக்கிரையானது. இந்த தீவிபத்தில் 4 பேர் படுகாயடைந்தனர்.
தீ விபத்தால் குடியிருப்புகள் அனைத்தும் எரிந்து நாசமானதால் அகதிகள் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர்.
No comments