பிரித்தானியாவில் வேகமாக பரவும் புதிய கொரோனா! WHO
பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட, வேகமாகப் பரவும் புதிய வகை கொரோனா தொற்று தொடர்பில் பிரித்தானிய அதிகாரிகளுடன் தான் நெருங்கிய தொடர்புகொண்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இப்புதிய வகை கொரோனா வைரஸானது, முந்தைய கொரோனா வைரஸைவிட வேமாக பரவுகின்றது.
மேலும் அதிக பலிகளை ஏற்படுத்துவதாக இல்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்புதியவகை கொரோனா வைரஸானது பிரித்தானியா தவிர, நெதர்லாந்து, டென்மார்க், அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும் கொவிட்-19 வைரஸ் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக லண்டன் உட்பட இங்கிலாந்தின் தென் கிழக்குப் பகுதிகிளல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments