24 மணி நேரம் - 354 சாவுகள் - கடுமையான எச்சரிக்கை வழங்கும் அரசாங்கம்!!
கொரோனாத் தொற்று குறைவடையவே இல்லை என அரசலாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் எச்சரித்துள்ளார். கடுமையான எச்சரிக்கை வேண்டும் எனவும் இவர் எச்சரித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்திற்குள் மட்டும் 5797 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலான ஆய்வுகூடங்கள் மூடியிருப்பதால் திங்கட் கிழமைகளில் வழமையாக பெறுபேறுகள் குறைத்தே வழங்கப்படுவது வழமை.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 354 பேர் கொரோனாத் தொற்றால் சாவடைந்துள்ளனர். இதானல் பிரான்சில் கொரோனாவினால் 60.900 பேர் சாவடைந்துள்ளனர்.
வைத்தியசாலைகளில் மட்டும் 42.126 பேர் சாவடைந்துள்ளார்.
கடந்த 24 மணிநேரத்திற்குள் 240 நோயாளிகளால் அதிகரித்து 25.201 பேர் கொரோனாத் தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2.737 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
No comments