PFIZER தடுப்பூசியின் பின்விளைவுகளை எச்சரிக்கும் பிரேசில் அதிபர்
உலகளவில் பெரும் உயிர்பலிகளை காவு கொண்ட கொரோனா தொற்று நோயை ஒரு “சிறிய காய்ச்சல்” என்று பிரேசில் ஜெய்ர் போல்சனாரோ நிராகரித்தார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அவர், மருந்து பரிசோதனை நிறுவனமான Pfizer, அதன் மூன்று கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்பட்ட தடுப்பூசிக்கான பக்க விளைவுகளுக்கு பொறுப்பேற்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
அவர் கூறியதாவது, “நீங்கள் ஒரு முதலையாக மாறினால், அது உங்கள் பிரச்சினை” என்றும் “நீங்கள் மனிதநேயமற்றவராக மாறினால்,பெண்களுக்கு தாடி வளரத் தொடங்கினால் அல்லது ஆண்கள் வேறு குரலில் பேசத் தொடங்கினால், என எந்தவொரு பக்க விளைவுகளுக்கும் நாங்கள் பொறுப்பேற்க மாட்டேன் மேலும் Pfizer அதன் ஒப்பந்தத்தில் மிகவும் தெளிவாக உள்ளதுஎன குறிப்பிட்டுள்ளார்.
1,86,356 இறப்புகளுடன் உலகின் இரண்டாவது மிக உயர்ந்த கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கையைக் கொண்டுள்ள பிரேசிலில் கடந்த புதன்கிழமை இந்த தடுப்பூசி மக்களிடையே போடப்பட்டுவருகிறது.
நாட்டின் நோய்த்தடுப்பு திட்டம் தாமதமாகவும் குழப்பமாகவும் இருப்பதாக பரவலாக விமர்சிக்கப்பட்டுவருகிறது.
அதனால் மக்களிடையே கொரோனா தடுப்பூசி தொடர்பில் சரியான விழிப்புணர்வு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
No comments