கடுமையான கட்டுப்பாடு விதிகள்…. லண்டனை விட்டு தப்பி செல்லும் மக்கள்! ..
அதனையொட்டி பிரித்தானியாவின் தலைநகரான லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளுக்கு கொரோனா பரவல் காரணமாக Tier 4 எனப்படும் கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்தார்.
அதன் நள்ளிரவுக்கு பின் லண்டனை விட்டு யாரும் வெளியேறக் கூடாது, அப்படி மீறினால் அவர்கள் கைது செய்யப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டது.
இந்த கடுமையான கட்டுப்பாடு விதிகள், கிறிஸ்துமஸை கொண்டாட காத்திருந்த மில்லியன் கணக்கான மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்நிலையில், இந்த பயணத்தடை வருவதற்குள் எப்படியாவது லண்டன் நகரை விட்டு சென்றுவிட வேண்டும் என இரயில் நிலையங்களில் ஏராளமான மக்கள் குவிந்து நிற்கின்றனர்.
அதன் படி St Pancras இரயில் நிலையத்தில், மாலை நேரத்தில் மக்கள் வேறு பகுதிக்கு செல்வதற்கு வந்து காத்திருக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவே இந்த கட்டுப்பாடுகள், ஆனால் அந்த விதிகள் எல்லாம் மறந்துவிட்டு, மக்கள் அஜாக்கிரதையும் இருப்பதாக சமூக ஆர்வர்லர்கள் கூறியுள்ளனர்.
No comments