Header Ads

அமெரிக்க அரசின் முக்கிய துறைகள் ஆபத்தில்!

 


சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து அமெரிக்க அரசின் முக்கிய துறைகள் ஆபத்தில் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 
இதுகுறித்து அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு பாதுகாப்பு முகமை  விடுத்துள்ள அறிக்கையில், மிக நுட்பமான, தொடர் சைபர் தாக்குதல் அமெரிக்காவின் அரசு முகமைகள், முக்கிய அரசு அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களை குறி வைத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 
டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த சோலார் விண்ட்ஸ் என்கிற ஐ.டி. நிறுவனத்தின், நெட்வொர்க் மேனேஜ்மெண்ட் மென்பொருளைப் பயன்படுத்திதான், சைபர் தாக்குதல் நடத்தியவர்கள், அமெரிக்காவின் முக்கிய கம்ப்யூட்டர்களில் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, சோலார் விண்ட்ஸ் நிறுவனத்தின் நெட்வொர்க் மேனேஜ்மெண்ட் மென்பொருளை, தங்களின் சர்வர்களில் இருந்து நீக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 

No comments

Powered by Blogger.