எமானுவல் மக்ரோனிற்கு பெல்ஜியத்தில் வைத்தே கொரோனா தொற்று - சுகாதார அமைச்சர்!
டந்த 10ம் திகதி மற்றும் 11ம் திகதிகளில், பெல்ஜயித்தின் தலைநகர் புரூக்செலில் நடந்த ஐரோப்பிய ஆலோசனைக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பன்நாட்டுத் தலைவர்களும், அவர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இங்கு வைத்தே ஜனாதிபதி எமானுவல் மக்ரோனிற்கு, கொரோனாத் தொற்று ஏற்பட்டு இருக்க வேண்டும் என்றும், வைரஸ் உள்ளே உருவாகி அதற்கான அறிகுறிகளைக் காட்டும் காலம் தாண்டி, சரியாக எமானுவல் மக்ரோனிற்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்றும், பிரான்சின் சுகாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.
இங்கு சமூக இடைவெளிகள் கடைப்பிடிக்கப்பட்டு முகக்கவசங்களுடன் தான் சந்திப்புக்கள் நடந்தன. ஆனால் இந்நிகழ்வில், அன்மையில் கொரோனத் தொற்றால் சாவடைந்த பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி வலெரி ஜிஸ்கார் தெஸ்தனின் நினைவேந்தல் நடாத்தப்பட்டது. இதில் ஓரிருவர் தவிர அனைவரும் முகக்கவசம் இல்லாமலேயே இருந்துள்ளனர். இதுவே எமானுவல் மக்ரோனிற்குத் தொற்று ஏற்பட்ட சந்தர்ப்பம் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments