Header Ads

பிரித்தானியாவிலிந்து அமெரிக்கா செல்ல நடைமுறைக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்

 


ஐரோப்பிய நாடுகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

பிரித்தானியாவில் மேலும் 70 சதவீதம் அதிக வேகத்தில் பரவும் எனக் கூறப்படும் புதிய வகை கொரோனா வைரஸ் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால், பிரித்தானியா முழுவதும் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் பல நாடுகள் பிரித்தானியாவுடனான எல்லைகளை மூடியதுடன், போக்குவரத்து தடைகளை அமுல் படுத்தியுள்ளன.

இந்நிலையில், பிரித்தானியாவிலிந்து அமெரிக்காவுக்கு பயணம் செய்ய புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு விதித்துள்ளது.

அதாவது, பிரித்தானியாவிலிருந்து அமெரிக்கா செல்ல விரும்பும் எவரும் தங்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்மொழியப்பட்ட புறப்பட்ட நேரத்தின் 72 மணி நேரத்திற்குள், கொரோனா வைரஸுக்கு எதிர்மறையை சோதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதற்கான ஆதாரத்தை காண்பித்த பிறகே அமெரிக்காவுக்கு பயணிக்க விமானித்தில் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்தப் புதிய கட்டுப்பாடுகள் வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC ) அறிக்கை வெளியிட்டுள்ளது.

புதிய வகைக் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பரவுவதை முன்கூட்டியே தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.