Header Ads

ஈபிள் கோபுரத்தை திருமணம் செய்த விசித்திர பெண்

 


உலகில் கலாசாரம் வாழ்க்கை முறைமை என்பன மக்களிடையே வேறுப்பட்டு காணப்படுகின்றது.

அது போல அவர்களின் திருமணங்களும் வித்தியாசமான முறையில் தன் பாலினத்தவரை மணம் செய்பவர்கள், உயிரற்ற பொருட்களை மணந்துகொள்பவர்கள் என காணப்படுகின்றார்கள்.

அவ்வாறு உயிரற்ற பொருட்களால் ஈர்க்கப்படுதல் Objectum Sexuality என அழைக்கப்படும்.

அந்த வகையில் Erika LaBrie என்னும் அமெரிக்கப் பெண் ஒருவர் பாரிஸிலுள்ள ஈபிள் கோபுரத்தால் ஈர்க்கப்பட்டுள்ளார்.

2007ஆம் ஆண்டு ஈபிள் கோபுரத்தை திருமணம் செய்துகொண்ட Erika LaBrie, தன் பெயரை Erika La Tour Eiffel என்று மாற்றிக்கொண்டுள்ளார்.

அதாவது பெண்கள் தன் பெயருக்குப் பின்னால் கணவர் பெயரை சேர்ப்பதுபோல், தன் பெயருக்குப் பின்னால் ஈபிள் கோபுரத்தின் பெயரை சேர்த்துக்கொண்டார் Erika.

இதனால் கடுமையான விமர்சனனக்களுக்குள்ளானார் Erika.

இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பின் ஈபிள் கோபுரத்துடனான உறவு முறிந்ததாக தெரிவித்த Erika, தன்னையும் ஈபிளையும் பிரிக்க ஊடகங்கள் முக்கிய பங்காற்றியதாக தெரிவித்துள்ளார்ஃ

ஆனாலும், தன் மனதில் இருக்கும் ஈபிளை அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது என்றும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.