Header Ads

கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு



 லத்தீன் அமெரிக்காவில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு அர்ஜென்டினா என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜென்டினாவில் கர்ப்பத்தின் 14 வது வாரம் வரை கருக்கலைப்புகளை சட்டப்பூர்வமாக்கியுள்ளது.

கருக்கலைப்பு மசோதாவுக்கு இந்த மாத தொடக்கத்தில் the Chamber of Deputies ஒப்புதல் அளித்து, செனட்டில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது 38 பேர் ஆதரவாகவும், 29 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

ஒருவர் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செனட்டில் இடம்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்புக்குப் பிறகு கருக்கலைப்புகளை சட்டப்பூர்வமாக்க அர்ஜென்டினா ஒப்புதல் அளித்துள்ளது.

இப்போது வரை, அர்ஜென்டினாவில் கற்பழிப்பு வழக்குகளில் அல்லது தாயின் உடல்நிலை ஆபத்தில் இருக்கும்போது மட்டுமே கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்பட்டது.

இந்த மசோதாவை ஆதரித்த ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ், சட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவது தனது பிரச்சார வாக்குறுதிகளில் ஒன்று என உறுதியளித்திருந்தார்.

வாக்கெடுப்பின் முடிவு வாசிக்கப்பட்டபோது, தலைநகர் ப்யூனோஸ் அயர்ஸில் உள்ள செனட் கட்டிடத்திற்கு வெளியே கூடிய ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் மக்கள் இதை வரவேற்கும் வகையில் பச்சைக் கொடிகளை அசைத்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.