ஞாயிற்றுக்கிழமை - பிரான்சில் முதற்கட்டக் கொரோனாத் தடுப்பு ஊசிகள்!
பிரான்சில் முதற்கட்டக் கொரோனாத் தடுப்பு ஊசிகள், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளன.
இரண்டு அல்லது மூன்று, மற்றவர்களின் உதவியுடன் தங்கிவாழும் முதியோர் இல்லங்களில் முதற்கட்டக் கொரோனாத் தடுப்பூசிகள் போடப்பட உள்ளதாக, பிரான்சின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.
பரிசிற்கு அண்மையிலுள்ள ஒரு முதியோர் இல்லமும், Bourgogne Franche-Comté யிலுள்ள ஒரு முதியோர் இல்லமும் முதற்கட்டமாகத் தடுப்பூசிகளிற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
முதற்கட்டத் தடுப்பூசிகள் சனிக்கிழமை விநியோகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments