🔴 24 மணி நேரம் - 381 சாவுகள் - 11.795 பேரிற்குக் கொரோனாத் தொற்று
நத்தார்ப் பண்டிகை நெருங்கும் நிலையில் மீண்டும் கொரோனாத் தொற்றும் சாவுகளும் அதிகரித்துள்ளன.
கடந்த 24 மணி நேரத்திற்குள் மீண்டும் 11.795 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பெறுபேறுகள் வராமையால் குறைவாகக் காட்டப்பட்ட எண்ணிக்கை மீண்டும் அதியுச்சமாகி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 381 பேர் கொரோனாத் தொற்றால் சாவடைந்துள்ளனர். இதானல் பிரான்சில் கொரோனாவினால் 61.702 பேர் சாவடைந்துள்ளனர்.
இதில்மருத்தவமனைகளில் மட்டும் இதுவரை 42.507 பேர் கொரோனாவால் சாவடைந்துள்ளனர்.
24.932 பேர் கொரோனாத் தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2.719 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
No comments