Header Ads

போஸ்னியாவில் அகதிகள் முகாமில் பாரிய தீ விபத்து

 



போஸ்னியா நாட்டில் வட மேற்கு பகுதியின் Bihac என்ற நகரில் உள்ள முகாமில் சுமார் ஆயிரத்து 200 பேர் தங்கி இருந்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதில் தங்கிய மக்கள் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு, சாதுரியமாக உயிர் தப்பினர்.

கரும்புகையுடன் பரவிய தீ, கொளுந்து விட்டு எரிந்தது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கடுமையாக போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை என தீயணைப்பு படையினர் தெரிவித்துள்னர்.

No comments

Powered by Blogger.