யாழில் தீவிரமாக அச்சுறுத்தும் கொரோனா – ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பாதிப்பு
ஒரே குடும்பத்தவர் ஐவர் உள்ளிட்ட 9 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். மருதனார்மடம் கொத்தணியில் மல்லாகம் பகுதியைச் சேர்ந்தவர்களே நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று 120 பேருக்குபி பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவர்களில் இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது. குறித்த தொற்றாளர் ஏற்கனவே மருதனார்மடம் கொத்தணியில் அடையாளம் காணப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவராவார்.
இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 481 பேருக்குப் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 9 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
No comments