உள்ளிருப்பு மீறல் அபராதம் - மிக அதிகம்!!
உள்ளிருப்பு நடைமுறையில் இருக்கும்போது, வெளியே செல்பவர்கள் அதற்கான பொருத்தமான அத்தாட்சிப் பத்திரத்துடன் மட்டுமே செல்ல வேண்டும் என, உள்ளிருப்பு ஆரம்பத்தில் உள்துறை அமைச்சர் தெரிவித்ததுடன், அதற்கான அத்தாட்சிப் பத்திரங்களையும் உள்துறை அமைச்சு வெளியிட்டும் இருந்தது.
இதில் அறிவிக்கப்பட்ட அத்தியாவசியக் காரணங்கள் இன்றி, அநாவசியமாக, வெளியே சென்று, உள்ளிருப்புக் கட்டுப்பாட்டை மீறியவர்களிற்கு, 135€ அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த 30ம் திகதி ஒக்டோர் மாதத்திலிருந்து, இரண்டு இலட்சத்து எழுபத்தியெட்டாயிரம் (278.000) அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக, உள்துறை அமைச்சகம் இன்று தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
No comments