Header Ads

பிரான்சின் ஜனாதிபதி நிக்கோலா சர்கோசிக்கு நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை




 பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோசிக்கு நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 

 
Nicolas Sarkozy மீது கடந்த சில ஆண்டுகளாக நிதி மோசடி வழக்கு ஒன்று விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த பத்து நாட்களாக இது தொடர்பான தீவிரமான விசாரணைகள் நீதிபதிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 


 
இந்நிலையில், இன்று செவ்வாக்கிழமை மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. Nicolas Sarkozy மீது வழக்கு தொடுத்துள்ள நிதித்துறை வழக்கறிஞர்கள் (le parquet financier), அவருக்கு நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ஒரு மில்லியன் யூரோக்கள் தண்டப்பணமும் அறவிடப்படவேண்டும் என கோரியுள்ளனர். 
 
எனினும் இறுதி தீர்ப்பில் இந்த தண்டனை விதிக்கப்படுமா என்பது குறித்து அறிய, மேலும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். 

No comments

Powered by Blogger.