Header Ads

திருட்டு வழக்கில் காவல்துறை அதிகாரி கைது!!

 



பரிசில் காவல்துறை  அதிகாரி ஒருவர் உட்பட 15 பேர் இன்று செவாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். 

 
வாகனங்கள் திருடப்பட்ட வழக்கு ஒன்றிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பரிஸ் மற்றும் அதன் புறநகர்களில் தொடர்ச்சியாக வாகனங்கள் திருடப்பட்டு வந்துள்ளன. 
இதுவரை கிட்டத்தட்ட 100 வாகனங்கள் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பான விசாரணைகளை பல மாதங்களாக  IGPN (காவல்துறைக்கான காவல்துறை) அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். 


 
இந்நிலையில், குற்றவாளிகள் அனைவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் காவல்துறை அதிகாரி ஒருவரும் உள்ளார். அவரே இந்த திருட்டு வழக்கின் பிரதான குற்றவாளி எனவும், இதற்கு அவர்  ‘மூளை’யாக செயற்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது. 
 
குறிப்பாக, இத்திருட்டு தொடர்பாக காவல்துறையினர் பல வழக்குகளை பதிவு செய்திருந்தனர். ஆனால் அந்த பதிவுகளில் இருந்து கிட்டத்தட்ட 20 வழக்குகளுக்கான ஆதாரங்கள் காவல்நிலையத்தில் இருந்து ‘மர்மமான’ முறையில் காணாமல் போயுள்ளன.  இதன் பின்னணியிலும் குறித்த காவல்துறை அதிகாரி இருந்துள்ளார் எனவும் அறிய முடிகிறது. 
 
2017 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 100 வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு 3 மில்லியன் யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.