அதிர்ச்சிப் புகைப்படம் - காவற்துறை வீரனின் உடலில் பற்றியெறியும் தீப்பிழம்பு!!
பொதுப்பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரான பேராட்டங்கள் கலவரமாக மாறியபோது, காவற்துறையினரின் மீது கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கலவரத்தில், காவற்துறையினர் மீது எரிகுண்டுகளும் வீசப்பட்டுள்ளது.
இதில் ஒரு காவற்துறை வீரன் மீது இந்த எரிகுண்டு பட்டு, அவரின் உடலில் தீப்பிழம்பு பற்றும் காட்சி, புகைப்படமாக்கப்பட்டுள்ளது. இதனை AFP வெளியிட்டுள்ளது.
'பிரான்சின் அடிப்டை நிர்வாகக் கட்டமைப்பை கலவரக்கார்கள் உடைக்க முயல்கின்றார்கள்' என இந்தச் சம்பவத்தையடுத்து, பரிசின் தலைமைக் காவற்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இவர்கள் காவற்துறையினரைக் கொலை செய்ய முயல்கின்றார்கள் என செனட்டர்கள் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments