Header Ads

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பி.சி.ஆர் மாதிரிகள் பெறும் நடவடிக்கை




 எஸ்.அஷ்ரப்கான்)


கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ.றிஸ்னி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளடங்கிய வைத்தியர் குழுவினர் கல்முனை முகைதீன் ஜும்ஆ பள்ளி மீன் சந்தை ,மரக்கறி சந்தை, உணவகங்களை உள்ளடக்கியதாக நேற்று (05) பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கான மாதிரிகளை பெற்றுக் கொண்டனர்.

இதற்காக கல்முனை முகைதீன் ஜும்ஆ பள்ளி மீன் சந்தை ,மரக்கறி சந்தை, உணவகங்கள்,முச்சக்கர வண்டி சாரதிகள்,வெளி இடங்களிலிருந்து வரும் வாகன சாரதிகள் ,மக்கள் கூட்டம் நிறைந்த  கடை உரிமையாளர்கள், கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தில் உள்ள ஊழியர்கள், சாரதிகள், உதவி ஆட்கள், அண்டிய பகுதியிலுள்ள கடை உரிமையாளர்கள், திருக்கோவில் அக்கரைப்பற்று பகுதிகளுக்கு வியாபாரத்துக்கு சென்று வந்தவர்கள், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலை செய்பவர்கள் என பல்வேறுபட்ட அதிஉயர் தொற்றுக்கு வாய்ப்புள்ள அனைவரிடமிருந்தும்  பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன.

இங்கு 100 பி.சி.ஆர். மாதிரிகள் பெறப்பட்டன. கல்முனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் தலைவர் டாக்டர் எம்.அஸீஸ் அவர்களும் இதன் போது கலந்து கொண்டார்.





No comments

Powered by Blogger.