உணவகத்தில் சாப்பிடச் சென்ற பெண்ணால் ஊழியர்களுக்கு காத்திருந்த அதிஷ்டம்
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிடச் சென்ற பெண் தனக்கு உணவு வழங்கிய கடை ஊழியர்களுக்கு டிப்ஸாக 5,600 டாலர் பணத்தை வழங்கியுள்ளார்.
28 பேர் பணிபுரியும் அந்த உணவகத்தில், அனைத்து ஊழியர்களுக்கும் இதன் மூலம் தலா 200 டாலர் டிப்ஸ் கிடைத்துள்ளது.
கடையின் உரிமையாளர் சல்லூக் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், வாடிக்கையாளரின் இந்த தாராள மனப்பான்மை ஊழியர்களை ஆனந்தக் கண்ணீரில் மூழ்கடித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வாடிக்கையாளர் விட்டுச் சென்ற ரசீது புகைப்படத்தையும் இணைத்து, ஒரு சென்ட் மதிப்பிற்கு உணவு வாங்கியதையும் வாடிக்கையாளரின் கையால் எழுதப்பட்ட, 5,600 டாலர் டிப்ஸ் குறிப்பையும் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொலைக்காட்சி சேனலிடம் பேசிய உணவக உரிமையாளர், வாடிக்கையாளர் இருக்கையை விட்டு வெளியேறிய பிறகு, உணவகத்தின் பொது மேலாளர் அவரிடம் அவசரமாகச் சென்று, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கேட்டுள்ளார்.
அந்த பெண்மணி ஒரு காசோலையைக் காட்டி, 5,600 டாலர் டிப்ஸ் எனத் தெரிவித்துள்ளார்
இந்நிலையில் அந்த பெண் செயல் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
No comments