மூன்று ஜோந்தார்மினர் சுட்டுப் படுகொலை - நடந்தது என்ன? முழு விபரம்!!!
நேற்று நள்ளிரவு, Puy-de-Dôme இலுள்ள Saint-Just இல் மூன்று ஜோந்தார்மினர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளளனர். இவர்களைச் சுட்டுக் கொன்ற நபரும் சாவடைந்து கிடந்துள்ளார்.
Saint-Just (Puy-de Dôme) இல் தனிமையில் உள்ள ஒரு வீட்டிலிருந்து, மனைவி மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறையை அடுத்து, ஜோந்தார்மினர் அழைக்கப்பட்டிருந்தனர். அந்த வீட்டிற்குள் சென்ற இரண்டு ஜோந்தார்மினர் மீதும் வன்முறையில் ஈடுபட்ட நபர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார். இதில் ஒரு ஜோந்தார்ம் உடனடியாகக் கொல்லப்பட மற்றையவர் காயமடைந்தார்.
அவசர சிகிச்சைப் பிரிவினரால் இவர்கள் வெளியே எடுக்கப்பட, அந்த நபர் வீட்டிற்குத் தீ வைத்துள்ளார். இதற்கான அங்கு வந்த தீயணைப்புப் படையினருடம் உள்நுழைந்த இரண்டு ஜோந்தர்மினர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. பத்து நிமிடங்களிற்குப் பின்னரே அவசரமுதலுதவி படையினர் நுழைந்தபோது அங்கு இரண்டு ஜோந்தார்மினரும் கொல்லப்பட்ட நிலையில் வன்முறையாளனும் கொல்லப்பட்டிருந்தார்.
No comments