Header Ads

புதிய கொரோனா தொற்று தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவல்

 


இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் இங்கிலாந்துக்கு விமானம், ரெயில் போக்குவரத்துகளை பல நாடுகளும் துண்டித்து உள்ளன.

இந்த வைரசின் பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை பற்றி இன்னும் உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை.

அதன் தன்மைகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் கேபிரியேசஸ் கூறும்போது, வைரஸ் கிருமி உருமாற்றம் அடைவது என்பது இயற்கையானது.

இங்கிலாந்தில் இருந்து வந்துள்ள அறிக்கையில் இந்த வைரசின் பரவல் வேகம் இருந்த போதிலும் இது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று இதுவரை எந்த மருத்துவ ஆதாரமுமில்லை.

இங்கிலாந்து எடின்பர்க் ராயல் மருத்துவ கல்லூரி நிபுணர் டி.பி.ராஜேஷ் கூறும்போது, வைரசின் உருமாற்றம் என்பது அதன் வாழ்க்கை சக்கரத்தில் வழக்கமானது.

வைரசில் உள்ள 1 அல்லது 2 புரோட்டீன் மூலக்கூறுகள் மாற்றங்கள் ஏற்படும்போது அந்த வைரஸ்கள் உருமாறி விடுகின்றன.

இந்த வைரசை பொறுத்த வரையில் தற்போது கொரோனாவுக்காக நடத்தப்பட்டு வரும் சாதாரண பி.சி.ஆர். பரிசோதனை முறையிலேயே கண்டுபிடிக்க முடிகிறது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி மருந்துகள் இதை கட்டுப்படுத்துமா என்ற கோள்வி எழுந்துள்ளது.

இங்கிலாந்தில் மட்டும் இதுவரை 1,108 முறை கொரோனா வைரசில் உருமாற்றம் ஏற்பட்டு உள்ளது.

கொரோனா பரவலை தடுப்பதற்கு தற்போது நாம் பின்பற்றும் மாஸ்க் அணிவது, கைகளை சுத்தப்படுத்துவது, சமூக இடைவெளிகளை கடைபிடிப்பது போன்றவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் சிறந்த வழியை பெற முடியும்.

No comments

Powered by Blogger.