மூன்றாவது உள்ளிருப்பிற்கான சாத்தியம் மறுக்கமுடியாதது - சுகாதார அமைச்சர்!!
கொரோனாத் தடுப்பூசிகளின் வீரியம் மற்றும் அதன் வெற்றியின் பெறுபேறுகள் உடனடியாக அறிய முடியாதவை. ஆனால் பிரான்சின் பல மருத்துவக் குழுக்களும், விஞ்ஞான ஆலோசகர்களும் எதிர்வரும் வாரங்களில், பிரான்சில் மிகவும் வீரியமான, ஆபத்தான, மூன்றாவது கொரோனாத் தொற்றலை ஏற்படும் என அச்சம் தெரிவித்துள்ளனர். மூன்றாம் கட்ட உள்ளிருப்பின் அவசியத்தையும் வலியுறுத்தி உள்ளனர். மக்களின் பாதுகாப்பிற்காக நாம் எந்தவிதக் கடுமையான நடவடிக்கைகiளும் எடுக்கத் தவறியதில்லை. மூன்றாம் கட்ட உள்ளிருப்பு அவசியம் என்றால் அதையும் மறுப்பதற்கில்லை" எனப் பிரான்சின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.
No comments