Header Ads

🔴 விசேட செய்தி : பிரித்தானியாவில் இருந்து பிரான்சுக்கு வந்த புதிய வைரஸ்!!

 



அண்மையில் பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட புதிய வைரஸ் ஒன்று தற்போது முதன்முறையாக பிரான்சில் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

 
Tours நகரில் ஒருவருக்கே இந்த புதிய தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இலண்டன் மாநகரில் இருந்து கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி பிரான்சுக்கு வந்திருந்த குறித்த நபர், சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். 
 
பின்னர் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அதன் பின்னர் அவர் முற்றாக பரிசோதிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு வந்திருக்கும் வைரஸ் முதன் முதலாக பிரான்சில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அது பிரித்தானியாவில் பரவும் புதிய VOC 202012/01 பிரிவைச் சேர்ந்த கொவிட் 19 வைரஸ் (du virus de la Covid-19 ) எனவும், நேற்று வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.