சீனாவில் மீண்டும் வேகமாக பரவி வரும்! அவசர நிலை அறிவிப்பு
சீனாவின் உகான் நகரில் கடந்த வருடம் உருவான கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டி படைத்து வருகிறது.
அந்த வைரசின் தாக்கம் தற்போது சற்று குறையயும் நிலையில் கொரோனாவுக்கு மருந்தும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து புதிய வகை வைரசாக பரவி வருகிறது.
இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் 70 சதவீதம் வேகமாக பரவி வரும் நிலையில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கியுள்ளது.
தலைநகர் பீஜிங்கில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பீஜிங் நகரில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அவசர நிலையை சீனா பிறப்பித்துள்ளது.
புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட 21 கொரோனா வைரஸ் பாதிப்புகள் சீனாவில் பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் திங்களன்று தெரிவித்துள்ளது.
விடுமுறை காலம் என்பதால் கொரோனா தொற்று பரவலை தடுக்க சீனா இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.
No comments