Header Ads

பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல்! அதிரடியாக செயற்பட்ட காவல்துறையினர்

 


பிரான்ஸின் Gerzat (Puy-de-Dôme) நேற்று ஞாயிற்றுக்கிழமை நகரில் காவல்துறையினர் மீது பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தின் போது சந்தேகத்துக்கு இடமான ஒருவர் மகிழுந்து தரிப்பிடம் ஒன்றின் பின்னால் மறைந்து இருந்து அல்லா ஹு அக்பர் என கோஷமிட்டு, அரபு மொழியில் சத்தமாக ஓதிக்கொண்டிருந்துள்ளார்.

இதனை அவதானித்த அங்கு வசிப்பவர்களில் ஒருவர் காவல்துறையினரை அழைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

குறித்த நபர் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு தயாராகிக்கொண்டிருந்ததாகவும், அதற்கு முன்னால் கடவுளை தொழுதுகொண்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினர் குறித்த நபரிடம் நெருங்கும் போது திடீரென அவர் காவல்துறையினர் மீது பாய்ந்துள்ளார்.

கையில் ரிவால்வர் வகை துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு அதன் மூலமாக அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முற்பட்டுள்ளார்.

ஆனால் அதற்குள்ளாக காவல்துறையினர் பிடித்து, கைது செய்தனர்.

குறித்த நபர் 29 வயதுடையவர் எனவும், காவல்துறையினரால் அறியப்படாதவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.