Header Ads

காதலனின் கிறிஸ்துமஸ் பரிசால் வெளியாகிய ரகசியம்

 


அமெரிக்காவில் 23 அண்ட் மீ என்ற பிரபலமான நிறுவனத்தில் நமது மூதாதையர்கள் குறித்து நமக்கு டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் தரவுகளை எடுத்து ரிப்போர்ட் அளிக்கிறது.

இதை ஆய்வு செய்ய ஒரு குடும்பத்தினரின் எச்சில் போதும் அதன் மூலமே அவர்களது மூதாதையர்கள் குறித்து அந்நிறுவனம் ஆய்வு செய்து சொல்லுகிறது.


இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த காதலர் ஒருவர் தன் காதலிக்கு வித்தியாசமான கிறிஸ்துமஸ் பரிசளிக்க நினைத்து காதலியின் குடும்பத்தினரின் எச்சிலைச் சேகரித்து 23 அண்ட் மீ நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார்.

அதன் ஆய்வு முடிவுகளும் வந்துள்ளது. கிறிஸ்துமஸ் அன்று தன் காதலியைச் சந்தித்து தனது கிறிஸ்துமஸ் பரிசாக அந்த ஆய்வு முடிவுகளை வழங்கியுள்ளார்.

முதலில் அதை எதிர்பாராத வித்தியாசமான பரிசாகக் கருதிய காதலி மிகவும் சந்தோஷமாக அந்த முடிவுகளைப் பார்க்கத்துள்ளார்.

ஆனால் அந்த முடிவில் அந்த குடும்பத்தினரின் எச்சில் டிஎன்ஏ பரிசோதனையில் காதலின் அம்மா வழி தாத்தா- பாட்டி, அம்மா, ஆகியோரின் டிஎன்ஏ ஒத்துப்போகிறது.

ஆனால் அந்த காதலின் சகோதரியின் டிஎன்ஏவில் – பாதி சகோதரி என்று முடிவு வந்துள்ளது.

அதாவது இருவரது டிஎன்ஏவிலும் தாயின் டிஎன்ஏ ஒத்துப்போகிறது.

தந்தையின் டிஎன்ஏ வேறு வேறாக இருக்கிறது என முடிவுகள் கூறியுள்ளன.

மேலும் அந்நிறுவனத்தில் உள்ள தரவுகளின் படி குறிப்பிட்ட காதலியின் டிஎன்ஏ அவர்களிடம் உள்ள ஜான் ஸ்மித் என்பவரின் டிஎன்ஏ வுடன் ஒத்துப்போவதாக முடிவுகள் வந்திருந்தன.

இதைப் படித்து அதிர்ச்சியடைந்த காதலி, தன் காதலனுடன் இருக்கும் போதே தன் தாய்க்கு தொலைப்பேசி அழைப்பை செய்து பாதி சகோதரி குறித்துக் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த தாய் மறுக்க. மகள் மீண்டும் தாயின் உங்களுக்கு ஜான் ஸ்மித் என யாரையாவது தெரியுமா? எனக் கேட்க தாயிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

அதன்பின்னர் மகள் தாயிடம் தனக்கு தன் காதலன் கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசு குறித்தும், ஆய்வு முடிவுகள் குறித்து தன் தாயிற்கு விளக்கினார்.

அதன் பின் அந்த தாய், “இது குறித்து உன் அப்பாவிடம் எதுவும் சொன்னாயா?” எனக் கேட்டுள்ளார். மகள் இல்லை எனச் சொன்னதும் தாய் உண்மையைச் சொல்லியுள்ளார்.

30 ஆண்டுகளுக்கு முன் தானும் அவரது தந்தையும் காதலித்து வந்ததாகவும் இடையில் இருவரும் சிறிது காலம் பிரிந்த போது அவர் தனது முன்னாள் காதலனான ஜான் ஸ்மித் உடன் வாழ்ந்ததாகவும் அதன் மூலம் பிறந்த மகள் என தெரிவித்துள்ளார்.

ஆனால் தாய்க்கு முன்னரே அது ஜான் ஸ்மித்தின் குழந்தை என்பது தெரியும் எனவும் 30 ஆண்டுகளாக இதை மறைத்து வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இந்த தகவலைக் காதலர் ரெட்டிட் தளத்தில் பதிவு செய்தார்.

இந்த தகவல் அந்த காதலியின் தாயை தவிர மற்ற குடும்பத்தாருக்குத் தெரியாது என்பதால் அவர்களின் பெயர் உள்ளிட்ட அடையாளங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

No comments

Powered by Blogger.