சுவிட்சர்லாந்து மக்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய தகவல்
சுவிட்சர்லாந்தில் நபர் ஒருவர் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானதாக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மத்திய சுகாதார அலுவலகம் வெளியிட்ட தகவலின் படி, ஜெனீவாவில் உள்ள தேசிய ஆய்வகத்திற்கு சோதனைக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில், இரண்டு மாதிரிகளில் புதிய கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானதாக தெரிவித்துள்ளது.
இரு நோயாளிகளும் பிரித்தானியா குடிமக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் சுவிட்சர்லாந்தில் அவர்களுக்கு கொரோனா உறுதியானது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் தனிமைப்படுத்தலில் இருப்பதாக சுகாதார அலுவகம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியா மற்றும் தென் ஆப்பரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸ் பல ஐரோப்பிய நாடுகளுக்கும், அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூருக்கும் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், வியாழக்கிழமை முதல் பிரித்தானியா மற்றும் தென் ஆப்பிரிக்கா பயணிகளுக்கு வதிக்கப்பட்ட பயணத்தடையை சுவிட்சர்லாந்த தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments