Header Ads

கொழும்பு உட்பட பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டாம்!


 

அவசரதேவைகளுக்காக மாத்திரம் மேல்மாகணத்திற்கு வெளியே பயணம் செல்வதை பின்பற்றுமாறு மேல்மாகாணத்தில் வசிப்பவர்களை குடும்ப சுகாதார பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

எங்களிற்கு வைரஸ் உள்ளது எங்களிற்கே தெரியாமலிருக்கலாம் என குடும்ப சுகாதார பணியகத்தின் இயக்குநர் வைத்தியர் பாலித கருணப்பெரும தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாங்கள் ஏனையவர்களுடன் தொடர்பிலிருந்தால் வைரஸ் பரவும் ஆபத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து தொடர்பில் பொதுமக்கள் சுயகட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் என கேட்கப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.