Header Ads

லண்டன் கடைகளில் விற்கப்படும் போலி கொரோனா மருந்து! பொது மக்களுக்கு எச்சரிக்கை




 உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றுக்கான சில மூலிகை மருந்துகள் விற்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், லண்டனின் ஆசிய பகுதி மக்கள் நிறைந்திருக்கும் கடைகளில், இந்தியாவில் இருந்து வரும் மூலிகை மருந்தான Coronil விற்கப்பட்டு வருகிறது.

இது சுவாசக் குழாய் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பதாகக் கூறுகின்றனர்.

பிபிசிக்கு பர்மிங்காம் பல்கலைக்கழகம் மேற்கொண்ட மருந்தின் ஆய்வக சோதனையில், குறித்த மாத்திரைகள் கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்காது என அறிவித்துள்ளது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த யோசனை கொரோனோ வைரஸுக்கு சிகிச்சையளிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று வைராலஜிஸ்ட் மருத்துவர் மைத்ரேய் ஷிவ்குமார் கூறியுள்ளார்.

பிரித்தானியாவின் விளம்பர விதிகளின் படி, கொரோனா மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது பற்றிய குறிப்புகளைத் தடைசெய்கின்றன.

குறிப்பாக, லண்டனின் Wembley-ல் இருக்கும் கடை ஒன்றில், கொரோனாவிற்கான நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் என்று கடையிலும், அதன் வலைத்தளத்திலும் விளம்பரபடுத்தப்பட்டுள்ளது.

இது போன்று மாத்திரைகள் விற்கும் குறைந்தபட்சம் நான்கு கடைகளை பிபிசி அறிந்துள்ளது.

ஆனால் விளம்பர தர நிர்ணய ஆணையம் (ASA), எந்தவொரு பொருளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று அங்கீகரிக்கப்பட்ட சுகாதார உரிமைகோரல்கள் எதுவும் பிரித்தானியாவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.