இரண்டாம் தொற்றலையில் இருந்த நாம் மீளவில்லை - உள்ளிருப்பிற்கு மீண்டும் அவசியம் - அரசினர் மருத்துவமனை!!
இரண்டாம் கட்டத் தொற்றலையிலிருந்தே நாம் இன்னமும் மீளவில்லை என, அரசினர் வைத்தியசாலைகளின் (AP-HP) தலைமை இயக்குநர் Martin Hirsch எச்சரித்துள்ளார். ஒரு ஊடகச் செவ்வியிலேயே இதனை இவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஒரு உள்ளிருப்பிற்கான அவசியம் கட்டாயம் உள்ளதெனவும் இவர் தெரிவித்துள்ளார்.
"மருத்துவப் பிரிவினரில் பலர் கொரேனாத் தொற்றிற்கு உள்ளாகி உள்ளனர். அவர்கள் மிகவும் களைத்துள்ள நிலையில் கொரொனத் தொற்றானது அதிகரித்தே செல்கின்றது. நாளாந்தம் பல கொரோனாத் தொற்று நோயாளிகள், தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர். இரண்டாம் கட்ட தொற்றலையையே நாம் இன்னமும் தாண்டியிராத நிலையில், மீண்டும் ஒரு தொற்றைத் தாங்குவது மருத்துவத் துறைக்குப் பெரும் சவாலாகவும், முடியாத செயலாகவும் இருக்கும்" எனவும் அரசினர் மருத்துவமனைகளின் தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
No comments