Header Ads

பிரான்ஸில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றினால் அரசின் முடிவு

 


பிரான்சில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப்பின் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் என்ற அச்சம் காணப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று தடுப்பூசி போடும் நடவடிக்கை அங்கு தொடங்கிய நிலையில், பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சரான Olivier Veran இதை தெரிவித்துள்ளார்.

மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எக்காரணத்தைக் கொண்டும் தவிர்க்கமாட்டோம் என்று Olivier Veran கூறியயுள்ளார்.

ஆனால், அதற்காக பொதுமுடக்கத்தை அறிவிப்பதாக நாங்கள் முடிவு எடுத்துவிட்டோம் என்று கூறமுடியாது.

நாளொன்றிற்கு சுமார் 15,000 பேர் வரை புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகிவருவதாக பிரான்ஸ் சுகாதாரத்துறை பதிவுசெய்துள்ளது.

இதற்கிடையில், பிரித்தானியாவில் புதிதாக பரவிவரும் வீரியமிக்க கொரோனா வைரஸ், பிரான்சுக்குள்ளும் நுழைந்துவிட்டது.

லண்டனிலிருந்து பிரான்ஸ் வந்த ஒருவருக்கு புதுவகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த வெள்ளிக்கிழமையன்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.