5 மாதக் குழந்தையை தீ வைத்துக் கொளுத்திய தாய்! விசாரணையில் வெளியாகிய தகவல்
இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலம் சிங்கரௌலி மாவட்டத்திலுள்ள சுகார் கிராமத்தைச் சேர்ந்தவர் குத்தி சிங் காண்ட்(27).
இவருக்குத் திருமணமாகி மூன்று பெண் குழந்தைகளுக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தைப் பிறந்திருக்கிறது.
அந்தக் குழந்தை பிறந்ததிலிருந்தே தாய் குத்திசிங் சுயநினைவின்றி வித்தியாசமாக நடந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்.
சனிக்கிழமை குத்திசிங்கின் மாமனார் ஸ்ரீபால் சிங், காவல்நிலையத்தைத் தொடர்புகொண்டு, தனது மருமகள் பிறந்து 5 மாதங்களான ஆண்குழந்தையை வீட்டிற்குள் அடைத்து தீவைத்து கொளுத்திவிட்டதாகவும், குழந்தை கதறி அழும் சத்தம் வெளியே கேட்பதாகவும் கூறியிருக்கிறார்.
சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த பொலிஸார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து குத்திசிங்கை கைதுசெய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் குத்தி தான் குழந்தையை தீவைத்ததை ஒத்துக்கொண்டுள்ளதுடன அவர் சுயநினைவின்றி இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், குத்திக்கு மனநலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவரை ஒரு மந்திரவாதியிடம் அழைத்துச்சென்று காட்டிவந்ததாக குத்தியின் மாமனார் தெரிவித்ததன்பேரில், அமானுஷ்ய பயிற்சிக்காக குழந்தையை கொன்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், குத்திக்கு தற்போது மனநல மருத்துவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
No comments