Header Ads

இங்கிலாந்தில் வேகமாக பரவும் புது வகை கொரோனா




இங்கிலாந்தில் வேகமாக பரவும் புது வகை கொரோனா

கடந்த ஆண்டு சீனாவில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது.

இந்நிலையில் இங்கிலாந்தின் பல பகுதிகளில் புது வகை கொரோனா வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



பிரித்தானிய சுகாதார செயலர் Matt Hancock, குறைந்தது 60 உள்ளூர் அதிகாரிகள் இந்த புது வகை கொரோனா வைரஸ் பரவுவதை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து உலக சுகாதார அமைப்பிற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அது குறித்து பிரித்தானிய அறிவியலாளர்களும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய வைரஸ் கண்டுபிடிப்பு மற்றும் அது வேகமாக பரவுவதாக வெளியிடப்பட்ட தகவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக Aberdeen பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறை பேராசிரியரான Hugh Pennington தெரிவித்துள்ளார்.

நுண்ணுயிர்களைப் பொருத்தவரை, இது ஒரு சாதாரண விடயம், இதைக் குறித்து திகிலடைய தேவை இல்லை என Pennington தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை விட, ப்ளூ வைரஸ் தன்னை வேகமாக மாற்றிக்கொள்ளும் தன்மையுடையது.

அதனால்தான் ஆண்டுதோறும் அறிவியலாளர்கள் புதிதாக ப்ளூ தடுப்பூசியை உருவாக்குகிறார்கள் என Pennington உறுதியளித்துள்ளார்.

No comments

Powered by Blogger.