யாழில் மூடப்பட்ட பாடசாலைகள்!
யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன என்று வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய கல்வி அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்டகலந்துரையாடலின் பின் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருதனார்மடம் கொரோனாத் தொற்றுப் பரவல் கொத்தணியின் பின்னர் வலி
காமம் கல்வி வலயத்துக்குட்பட்ட உடுவில் மற்றும் தெல்லிப்பழை கல்விக் கோட்டப் பாடசாலைகள் நேற்று திங்கட்கிழமை மூடப்பட்டன.
இந்தநிலையில், வலிகாமம் மற்றும் யாழ்ப்பாணம் கல்வி வலயங்களுக்குட்
பட்ட அனைத்துப் பாடசாலைகளும் இன்று செவ்வாய்க்கிழமை தொடக்கம் மறு அறி
வித்தல் வரை மூடப்படுகின்றன என்று மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
No comments