கனடாவில் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்கள்
கனடாவில் குளிர்காலநிலையில் மக்கள் பெரும் சிரமத்தைஎதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகின்றது
கனடாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 519பேர் பாதிக்கப்பட்டதோடு 104பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக கனடா விளங்குகின்றது.
இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஐந்து இலட்சத்து 15ஆயிரத்து 314பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 14ஆயிரத்து 332பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 77ஆயிரத்து 361பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 694பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், நான்கு இலட்சத்து 23ஆயிரத்து 621பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
No comments